Enable Javscript for better performance
காதலிக்கு திருமணம் நடந்த திருமண மண்டபம் முன் தீக்குளித்த இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காதலிக்கு திருமணம் நடந்த திருமண மண்டபம் முன் தீக்குளித்த இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 11th July 2018 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் காதலிக்கு திருமணம் நடந்த திருமண மண்டபம் முன் தீக்குளித்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
    சென்னை பீர்க்கன்கரணையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு (28). இவர், ஒரக்கடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 
    சந்துரு பீர்க்கன்கரணையைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்தாராம்.
    இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கும், வந்தவாசியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
    இதுகுறித்து தகவலறிந்து வந்தவாசிக்கு வந்த சந்துரு, கடந்த 2-ஆம் தேதி அதிகாலை அந்தத் திருமண மண்டபம் முன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    பலத்த தீக்காயமடைந்த சந்துருவை அங்கிருந்தவர்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த சந்துரு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். 
    இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai