Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    பெரணமல்லூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரணமல்லூர் பேரூராட்சியில் 3, 9, 10, 11-ஆவது வார்டு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
    இந்த நிலையில்,  3, 9, 10, 11-ஆவது வார்டுகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் காலிக் குடங்களுடன் பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதனிடம் ,  3, 9, 10, 11-ஆவது வார்டுகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
    மனுவை பெற்றுக்கொண்ட கோபிநாதன், உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில், போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai