Enable Javscript for better performance
செய்யாறு அரசுக் கல்லூரியில் பி.காம். படிப்புக்கு ஜூலை 16-இல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அரசுக் கல்லூரியில் பி.காம். படிப்புக்கு ஜூலை 16-இல் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 11th July 2018 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம். (நிதி கணக்குப் பதிவியல்) பட்டப் படிப்புக்கு வரும் 16-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.எழிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம். (நிதி கணக்கு பதிவியல்) படிப்புக்கு கடந்த 9-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதியும், முதுநிலை படிப்புகளுக்கு வரும் 30-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதேபோல, எம்.பில். படிப்புகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்டு 7-ஆம் தேதியும், மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 10-ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai