Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 542 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 542 மனுக்கள்

    By DIN  |   Published on : 11th July 2018 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 542 மனுக்கள் பெறப்பட்டன.
    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்களை மாதத்துக்கு 2 முறை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்துக்கான முதல் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். 
    சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா நா.டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த நலத் திட்ட உதவிகள், கோரிக்கைகள் அடங்கிய 542 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், ஆட்சியரிடம் மனு அளித்த ஒரு மாற்றுத் திறனாளிக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டது. 
    இதில், ஏராளமான மாற்றுத் திறனாளிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai