Enable Javscript for better performance
ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம், செக்கு மேட்டுத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு காப்பு அணிவித்தல் விழா நடைபெற்றது. அன்று முதல் தினமும் இரவு வேளைகளில் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அம்மன் கரகம், பூ கரகம், சக்தி கரகம் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தன. கரகங்கள் கோயிலை வந்தடைந்தவுடன், கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதில், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai