Enable Javscript for better performance
25 மக்களவைத் தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தொகுதிகளிலும், 200 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர்  டி.டி.வி.தினகரன் கூறினார்.
    திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
    தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சியை மத்திய பாஜக அரசு தான் தாங்கிப் பிடித்துள்ளது. 
    எங்கள் தரப்பைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் சேர்ந்து தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்தோம். மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி நடைபெற்றிருக்கும்.
    முட்டை, சத்துமாவு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சரை மத்திய அரசு தான் விசாரிக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் இதுபோன்ற முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுகின்றன.
    சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எல்லாம் செயல்பாட்டுக்கு வராது. வரும் மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 25 தொகுதிகளில் வெற்றி பெறும். 
    மீதமுள்ள இடங்களில் எங்களது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். அப்போது, தமிழகம் தான் இந்தியப் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும்.
    அந்தச் சமயத்தில் தமிழகத்துக்குத் தேவையில்லாத திட்டங்களை நாங்கள் தடுப்போம். 
    சட்டப் பேரவைத் தேர்தலில் அமமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார் அவர்.
    பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம் உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai