Enable Javscript for better performance
உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் குடும்ப நலத் துறை, திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் இணைந்து உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணியை புதன்கிழமை நடத்தின.
    திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு குடும்ப நல துணை இயக்குநர் ஏ.எஸ்.அன்பரசி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் எஸ்.தங்கவேல், வட்டாட்சியர் கு.மனோகரன், சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை, திருவூடல் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் 16 கால் மண்டபம் எதிரே நிறைவடைந்தது.
    பேரணியில், நலப் பணிகள் இணை இயக்குநர் (பொ) கே.எம்.ஏழுமலை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆர்.மீரா, காசநோய் துணை இயக்குநர் (பொ) பி.அசோக் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், செவிலியப் பயிற்சி மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai