Enable Javscript for better performance
கோயில்களில் தீபம் ஏற்ற தடை: அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தஇந்து முன்னணி முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கோயில்களில் தீபம் ஏற்ற தடை: அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்த இந்து முன்னணி முடிவு

    By DIN  |   Published on : 12th July 2018 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் தீபம் ஏற்ற விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்காவிட்டால், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வீட்டு முன் இந்து முன்னணி சார்பில் தொடர் தீபம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியின் மாநிலப் பேச்சாளரும், திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான டி.எஸ்.சங்கர் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் தீபம் ஏற்ற தடை விதித்துள்ள தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. 
    மனதில் உள்ள இருளை அகற்ற ஆலயத்தில் தீபம் ஏற்றும் இந்துக்களின் தொன்றுதொட்ட பாரம்பரிய வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கையால், ஆலய நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற்றப்படும் என்பது உறுதி.
    தீபம் ஏற்றக்கூடிய திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் இவ்வாறு தீபம் ஏற்ற தடை விதித்திருப்பது வியப்புக்குள்ளாகிறது. 
    எனவே, இந்த உத்தரவை அறநிலையத் துறை ஆணையர் திரும்பப் பெறாவிட்டால், அறநிலையத் துறை அமைச்சரின் வீட்டு வாசலில் தொடர் தீபம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai