Enable Javscript for better performance
செங்கம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் 18 பவுன் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் 18 பவுன் நகைகள் திருட்டு

    By DIN  |   Published on : 12th July 2018 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 18 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் வசிப்பவர் ஓட்டுநர் பூபதி (58). இவரது வீட்டுக்கு அருகில் மீன் வியாபாரியான பழநி (48), செல்வம் (30) ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ளன.
    பூபதி குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு மாடி வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள கூரை வீட்டில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு பூபதியின் மாடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பூரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனர்.
    இதேபோல, அருகிலுள்ள பழநி வீட்டில் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம், செல்வம் வீட்டில் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனர். புதன்கிழமை காலையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் தங்க, வெள்ளி நகைகள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கம் போலீஸார், திருட்டு நடைபெற்ற வீடுகளுக்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர். மேலும், இதுகுறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai