Enable Javscript for better performance
செய்யாறு அருகே அரசுப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே அரசுப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 12th July 2018 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு வட்டம், சகாயபுரம் பூம்பூம் மாட்டுக் காலனியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ.21.24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை திறந்து வைத்தனர்.
    விழாவுக்கு செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் தலைமை வகித்தார். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.அன்னம்மாள், மாவட்டக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    இதில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    நிகழ்ச்சியின்போது, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
    அதன்படி, பூம்பூம் மாட்டுக் காலனியில் வசிக்கும் குழந்தைகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கிட புதிய பள்ளி அறிவிக்கப்பட்டு, ரூ.21 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    இதைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியின்போது, ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை வருகைப்பதிவு அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai