Enable Javscript for better performance
திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா தெருமுனை பிரசாரக் கூட்டம் வந்தவாசி, ஆரியாத்தூர், ஆராசூர், பொன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சி.ஆர்.
    பெருமாள், டி.பாலாஜி, ஆர். நேதாஜிகுமரன், எச்.மதன்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார் வரவேற்றார். தலைமைக் கழகப் பேச்சாளர் தருமபுரி அதியமான், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
    ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், ஆர்.நந்தகோபால், எஸ்.சுரேஷ்கமல், நகரச் செயலர் அ.பாபு, ஒன்றியப் பொறியாளர் அணி அமைப்பாளர் எ.எஸ்.பிரபு, ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எச்.ஜலால் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai