Enable Javscript for better performance
திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ.75 ஆயிரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ.75 ஆயிரம் பறிமுதல்

    By DIN  |   Published on : 12th July 2018 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வாகனச் சான்று புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் சாலையில் ஓடக்கூடிய அளவுக்கு தகுதியானதாக உள்னவா என்பதை ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை பறக்கும்படை அதிகாரியும், விழுப்புரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருமான துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் புதன்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
    இவர்கள் இருவரும் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். 
    மாலை 4.30 மணிக்கு திடீரென திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சரவணக்குமார், ஆய்வாளர்கள் அருள்பிரசாத், ரஜினிகாந்த் மற்றும் போலீஸார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனையிடத் தொடங்கினர்.
    அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், பறக்கும்படை அதிகாரி துரைசாமியிடம் இருந்து ரூ.50 
    ஆயிரமும், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.25 
    ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai