Enable Javscript for better performance
திருவண்ணாமலை கோட்டாட்சியர் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக எஸ்.தங்கவேல்  புதன்கிழமை பொறுப்பேற்றார்.
    திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக இருந்த உமா மகேஸ்வரி திருவண்ணாமலை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தணித்துணை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல, திருச்செங்கோடு கோட்டாட்சியராக இருந்த எஸ்.தங்கவேல், திருவண்ணாமலை கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
    இந்த நிலையில், திருவண்ணாமலை கோட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்ற எஸ்.தங்கவேலுவுக்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கே.சரஸ்வதி, வட்டாட்சியர்கள் கு.மனோகரன் (திருவண்ணாமலை), சுப்பிரமணியன் (தண்டராம்பட்டு) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai