Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டம்: ஜூலை 25 வரை ஆட்சேப மனு அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டம்: ஜூலை 25 வரை ஆட்சேப மனு அளிக்கலாம்  

    By DIN  |   Published on : 12th July 2018 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச் சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், வரும் 25-ஆம் தேதி வரை தங்களது ஆட்சேப மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
    செலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்குத் தேவையான நிலம் அளவீடு செய்யும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கு தங்களது நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று விவசாயிகள் பலர் தங்களது ஆட்சேப  மனுக்களை திருவண்ணாமலை, செல்வா நகர், 2-ஆவது தெருவில் உள்ள பசுமை வழிச் சாலைத் திட்ட நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் அளித்து வந்தனர்.
    இந்த மனுக்கள் அளிப்பதற்கான காலக்கெடு கடந்த 9-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்படி, 627 மனுக்களை விவசாயிகள் அளித்திருந்தனர். இவர்களில், 577 பேர் நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து மனுக்களை அளித்துள்ளனர்.
    இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பசுமை வழிச் சாலைத் திட்ட எதிர்ப்புக் குழுவினர், விவசாயிகள் சந்தித்து, ஆட்சேபனை மனுக்கள் அளிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
    இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சேப  மனுக்களை அளிப்பதற்கான காலக் கெடுவை வரும் 25-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai