Enable Javscript for better performance
பீமன் நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த கட்டட மேஸ்திரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பீமன் நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த கட்டட மேஸ்திரி சாவு

    By DIN  |   Published on : 12th July 2018 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியிலிருந்து 50 அடி பள்ளத்தில் தவறு விழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
    போளூரை அடுத்த கட்டிபூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் வெற்றிவேலன் (18). கட்டட மேஸ்திரியான இவரும், இவரது தம்பி கோபி (எ) வீரவேல் (16) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (24), யுகபிரியந் (18), விக்னேஷ் (21), அஜித் (17) ஆகியோரும் இரு சக்கர வாகனத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியம், ஜமுனாமரத்தூரை அடுத்த பீமன் நீர்வீழ்ச்சிக்கு புதன்கிழமை சென்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு நீர்வீழ்ச்சியில் குளித்தனராம்.
    அப்போது, வெற்றிவேலன் நிலைதடுமாறி பீமன் 
    நீர்வீழ்ச்சியில் இருந்து 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜமுனாமரத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வெற்றிவேலன் சடலத்தை மீட்டு, போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai