Enable Javscript for better performance
பெருமாள் கோயில் குளத்தை சீரமைக்க பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கண்ணமங்கலத்தை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை சீரமைக்க புதன்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது.
    அய்யம்பாளையம் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு வாய் பேச முடியாத குழந்தைகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்றால் தேன் கொடுத்து பேச வைக்கின்றனர்.
    இந்தக் கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளம் மலை அடிவாரத்தில் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை சார்பில், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் இந்தக் குளம் சீரமைக்கப்பட உள்ளது. 
    இதையொட்டி, படைவீடு ரேணுகாம்பாள் கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் பூமிபூஜை செய்து பணியை தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் மோகன் மற்றும் அலுவலர்கள்
     உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai