Enable Javscript for better performance
போளூரில் இன்று  சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் இன்று  சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் முகாம்

    By DIN  |   Published on : 12th July 2018 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை சார்பில், விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயிச் சான்று வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
    போளூர் வட்டத்தில் உள்ள 40 ஊராட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏரியில் வண்டல் மண் அள்ளிக்கொள்ளவும், வேளாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் மானியம் பெறவும், அரசின் நலத் திட்ட உதவிகள் பெறவும், நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 100 சதவீத மானியம் பெறவும் சிறு, குறு விவசாயிச் சான்று அவசியமாகிறது.
    எனவே, விவசாயிகள் சுலபமான முறையில் சிறு, குறு விவசாயிச் சான்று பெறும் வகையில், வேளாண்மைத் துறை சார்பில், போளூர் பிர்கா விவசாயிகளுக்கு வியாழக்கிழமை (ஜூலை 12) வட்டாட்சியர் அலுவலகத்திலும், கேளூர் பிர்கா விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 13) கேளூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், சந்தவாசல் பிர்கா விவசாயிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 14) சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் சிறு, குறு விவசாயிச் சான்று வழங்கும் முகாம் நடைபெறும் என போளூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai