Enable Javscript for better performance
மனுநீதி நாள் முகாம்: 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மனுநீதி நாள் முகாம்: 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 12th July 2018 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே உள்ள வெள்ளாகுளம், போளூரை அடுத்த வெள்ளூர் ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 205 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    வெம்பாக்கம் வட்டம், வெள்ளாகுளம், தாலிக்கால், ஒழகவாக்கம், செட்டித்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் வெள்ளாகுளம் கிராமத்தில் நடைபெற்றது. 
    முகாமுக்கு வட்டாட்சியர் அ.சுபாஷ்சந்தர் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர்  துளசிராமன் வரவேற்றார். 
    வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.பொன்னுசாமி, வருவாய் ஆய்வாளர்கள் டி.பழனி, எஸ்.தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு, 139 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம், நத்தம் பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
    வெள்ளூரில்...: போளூரை அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, வருவாய் ஆய்வாளர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் பானு கலந்து கொண்டு, 66 பேருக்கு பட்டா மாற்றம், சிறு, குறு விவசாயிச் சான்று, முதிர்கன்னி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
    வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai