Enable Javscript for better performance
வேம்புலி அம்மன் கோயில் திருவிழா: ஆரணியில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    வேம்புலி அம்மன் கோயில் திருவிழா: ஆரணியில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 12th July 2018 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
    ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டாக ஆடித் திருவிழா  நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவையொட்டி, வரும் 20-ஆம் தேதி பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும், வரும் 21-ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளர் சங்கர்கணேஷின் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளன.
    இந்த விழாவில் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். 
    இந்த விழாவை முன்னிட்டு, புதன்கிழமை ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதில், விழாக்குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.நடராஜன், விழாக்குழு நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஆறுமுககவுண்டர், செல்வராஜ், பேராசிரியர் சிவா, ஏழுமலை, சங்கர், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai