Enable Javscript for better performance
அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

    By  செய்யாறு,  |   Published on : 13th July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களை கல்வித் துறையில் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     செய்யாறு ஒன்றியம், பூம்பூம் மாட்டுத்தாங்கல் காலனியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ். விஜயசாரதி, செந்தில்நாதன், ராமச்சந்திரன், அருண்குமார், சீனுவாசன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
     அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் கணக்கு மேலாளர், கணக்காளர்கள், பொறியாளர்கள், கணினி பிரிவு பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களாக 1,430 -க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம்.
     மேற்கண்ட துறை சார்பில் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களில் தற்போது நாங்கள் பணியாற்றி வரும் பணியிடங்களும் அடங்கும். இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் கல்வித் துறையின் நிரந்தர பணியிடங்களாகும். ஏற்கெனவே, இந்தத் துறைகளில் பணியாற்றிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கல்வித் துறையில் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
     அதேபோல, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் எங்களையும் கல்வித் தகுதியின் அடிப்படையில் கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தரமாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai