Enable Javscript for better performance
அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
     திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலை உள்ளது. அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவையொட்டி, புதன்கிழமை பல்வேறு அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
     திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மருத்துவர் எ.வ.கம்பன் ஆகியோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் து.சக்கரவர்த்தி, மெய்யூர் சந்திரன், சு.விஜி, ம.குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai