Enable Javscript for better performance
உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 2 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 2 இளைஞர்கள் கைது

    By  திருவண்ணாமலை,  |   Published on : 13th July 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே உணவக உரிமையாளரை மதுப் புட்டியால் குத்திய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
     திருவண்ணாமலையை அடுத்த கலர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (24). இவர், அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்துக்கு அண்மையில் திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (21), அஜித் (21) ஆகியோர் வந்தனராம்.
     பின்னர், இருவரும் சேர்ந்து மது அருந்த வேண்டும் என்று கேட்டனராம். இதற்கு, பிரகாஷ் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த விஜய், அஜித் ஆகியோர் சேர்ந்து பிரகாஷை பீர் வகை மதுப் புட்டியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனராம். பலத்த காயமடைந்த பிரகாஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விஜய், அஜித் ஆகியோரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai