Enable Javscript for better performance
கிணற்றை தூர்வாரியபோது கிரேன் கம்பிவடம் அறுந்து 2 தொழிலாளர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றை தூர்வாரியபோது கிரேன் கம்பிவடம் அறுந்து 2 தொழிலாளர்கள் சாவு

    By  திருவண்ணாமலை  |   Published on : 13th July 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றை தூர்வாரியபோது, கிரேன் கம்பிவடம் அறுந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் இறந்தனர்.
     கீழ்பென்னத்தூர் வட்டம், சோ.பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம். இவரது நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் போதிய அளவு தண்ணீர் இல்லை. எனவே, கடந்த சில நாள்களாக கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது.
     அதேபோல, வியாழக்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்ற நிலையில், பணி முடிந்து மாலையில் தொழிலாளர்கள் கிரேன் கம்பிவடம் மூலம் கிணற்றில் இருந்து மேலே வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் கம்பிவடம் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக கிரேன் மூலம் மேலே வந்துகொண்டிருந்த கீழ்பென்னாத்தூரை அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலு (48), பாண்டு (45) ஆகியோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதனால் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai