Enable Javscript for better performance
சிறு, குறு விவசாயிகள் சான்று பெற இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்- Dinamani

சுடச்சுட

    

    சிறு, குறு விவசாயிகள் சான்று பெற இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்

    By  திருவண்ணாமலை,  |   Published on : 13th July 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று பெற விரும்பும் விவசாயிகளுக்காக அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 13, 14) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
     திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக சாகுபடி செய்யும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் 13,695 ஹேக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளது.
     இந்தத் திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைநீர் தூவான் கருவிகள் வேளாண் துறை மூலம் வழங்கப்படுகின்றன.
     இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு சிட்டா, அடங்கல், நில அளவை வரைபடம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
     இந்த ஆவணங்களை விவசாயிகளுக்கு எளிதில் வழங்கும் வகையில், வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் வெள்ளி, சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
     இந்த முகாம்களில் விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்கள் வழங்கப்படுவதுடன், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயனடைய பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
     எனவே, விவசாயிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai