Enable Javscript for better performance
தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு

    By  செங்கம்,  |   Published on : 13th July 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கத்தை அடுத்த கிளையூர் தாழைமடுவு ஸ்ரீகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை அமாவாசை வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
     செங்கத்தை அடுத்த கிளையூர் தாழைமடுவு ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றன.
     தொடர்ந்து, காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர்.
     அமாவாசை வழிபாட்டையொட்டி, செங்கம் அரசு நகர்ப் பேருந்து பணிமனை சார்பில், தாழைமடுவு ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மலை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai