Enable Javscript for better performance
தேவிகாபுரத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தேவிகாபுரத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் பங்கேற்பு

    By  போளூர்/ ஆரணி,  |   Published on : 13th July 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, குழந்தை பெற்ற பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
     தேவிகாபுரம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
     இதில், தமிழக இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, மருத்துவ முகாம், ரத்த தான முகாமைத் தொடக்கிவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
     தமிழக அரசு ஒன்றிய அளவில் ஆண்டுக்கு 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என ஆணையிட்டதன்பேரில், இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
     இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் இசிஜி, குழந்தைகள் நல பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் மற்றும் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றார்.
     தொடர்ந்து, குழந்தை பெற்ற பெண்களுக்கு அம்மா குழந்தை நலப் பெட்டகம், பள்ளி மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி, யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். இதையடுத்து நடைபெற்ற மருத்துவ முகாம் மூலம் 1,875 பேர் பயனடைந்தனர்.
     நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், வட்டார மருத்துவர் வளர்ச்செல்வி, மருத்துவர் முருகன், முன்னாள் ஒன்றியக்
     குழுத் தலைவர் க.சங்கர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, நகரச் செயலர் அசோக்குமார், பாசறை மாவட்டச் செயலர் கஜேந்திரன், நிர்வாகிகள் அகிலேஷ் பாபு, சுரேஷ், குமரன், சதிஷ், சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai