Enable Javscript for better performance
பைக் மோதியதில் மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
     வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த ராமு மனைவி தனலட்சுமி (70). இவர், வியாழக்கிழமை நாரையூர் - பன்னியூர் சாலையில் எம்.ஜி.ஆர். நகர் அருகே நடந்து சென்றார். அப்போது, நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஓட்டி வந்த பைக் தனலட்சுமி மீது மோதியது.
     இதனால் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனலட்சுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai