Enable Javscript for better performance
ரூ.8.50 கோடியில் குடிமராமத்துப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.8.50 கோடியில் குடிமராமத்துப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    By  திருவண்ணாமலை  |   Published on : 13th July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.8.50 கோடியில் 34 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     தமிழகத்தில் நீர்வள ஆதாரத் துறை சார்ந்த ஏரிகளை அந்தந்தப் பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புனரமைக்கும் திட்டம் 2016-2017இல் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 2017 - 2018ஆம் ஆண்டில் ரூ.328.95 கோடியில் தமிழகம் முழுவதும் 1,511 ஏரிகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 30 ஏரிகள், 2 அணைக்கட்டுகள், 2 நீர் வழங்கு வாய்க்கால்கள் என மொத்தம் 34 பணிகள் செய்ய ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
     இந்த நிதியைக் கொண்டு தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் ஏரி ரூ.25 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புனரமைக்கும் பணியை தரமாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
     மாவட்டம் முழுவதும் ரூ.8.50 கோடியில் 34 பணிகளும் செய்து முடிக்கும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 7,750 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai