Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 62 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 62 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    திருவண்ணாமலையை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. 
    திருவண்ணாமலை வட்டாட்சியர் கு.மனோகரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் பி.முருகன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி வரவேற்றார்.
    முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 89 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 6 பேருக்கு பட்டா மாறுதல் சான்றுகள், ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை என மொத்தம் 7 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வட்டாட்சியர் கு.மனோகரன் வழங்கினார். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பரணிதரன், ஜீவிதா, பலராமன், வெங்கடாஜலம், ஊராட்சிச் செயலர் ஆர்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    போளூர்: போளூர் வட்டம், வெண்மணி ஊராட்சியைச் சேர்ந்த பாப்பாம்பாடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.  வட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்து, 78 மனுக்களைப் பெற்றார்.
    பின்னர், 25 பேருக்கு தோராயப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் குப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    புதுப்பாளையம்: புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காஞ்சி, சி.கெங்கம்பட்டு, ஆலத்தூர் கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து, 30 பயனாளிகளுக்கு செங்கம் வட்டாட்சியர் ரேணுகா நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 
    இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai