Enable Javscript for better performance
ஆரணி பகுதியில் ரூ.20 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி பகுதியில் ரூ.20 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 14th July 2018 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி பகுதியில் ரூ.20 கோடியில் சாலைகளை மேம்படுத்தும் பணியை  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
    ஆரணி நெடுஞ்சாலை உள் கோட்டத்துக்கு உள்பட்ட சாலைகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி, ஆற்காடு - விழுப்புரம் சாலை ரூ.3 கோடியே 3 லட்சத்திலும், கண்ணமங்கலம் - ஆரணி சாலை முதல் அடையபுலம் சாலை வரை ரூ.60 லட்சத்திலும், அக்ராபாளையம் முதல் எஸ்.யு.வனம் வரையிலான சாலை ரூ.1.30 கோடியிலும், வெட்டியாந்தொழுவம் முதல் எஸ்.யு.வனம் வரையிலான சாலை ரூ.90 லட்சத்திலும், ஆரணி - வாழப்பந்தல் சாலை ரூ.60 லட்சத்திலும், ஆரணி - படவேடு சாலை முதல் முள்ளிப்பட்டு வரையிலான சாலை ரூ.35 லட்சத்திலும், ஆரணி - தேவிகாபுரம் இடையிலான சாலை ரூ.3.85 கோடியிலும் மேம்படுத்தப்படுகின்றன.
    இதேபோல, கடலூர் - சித்தூர் சாலை முதல் ரெட்டிப்பாளையம் வரையிலான சாலை ரூ.1.5 கோடியிலும், அப்பநல்லூர் சாலை ரூ.70 லட்சத்திலும், புலவன்பாடி சாலை ரூ.70 லட்சத்திலும், ஆரணி - தேவிகாபுரம் சாலை ரூ.90 லட்சத்திலும், திருவத்திபுரம் - ஆரணி சாலை ரூ.2.25 கோடியிலும், ஆற்காடு - விழுப்புரம் சாலை முதல் லாடரவரம் வரையிலான சாலை ரூ. ஒரு கோடியிலும், கண்ணமங்கலம் - ஆரணி சாலை முதல் ஆரணி - படவேடு சாலை வரை குண்ணத்தூர் வழியாக ரூ.45 லட்சத்திலும், திருவத்திபுரம் - ஆரணி சாலை முதல் காட்டேரி வரையிலான சாலை ரூ.27 லட்சத்திலும், லாடவரம் முதல் ராந்தம் கொரட்டூர் வரையிலான சாலை ரூ.20 லட்சத்திலும் மேம்படுத்தப்படுகின்றன.
    மொத்தம் ரூ.20 கோடியே 92 லட்சத்தில் நடைபெறும் இந்தப் பணிகளில் பல சாலைகளின் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கும் விழாவும், சில பணிகளை சிறப்பு பூஜைகள் செய்து தொடக்கி வைக்கும் விழாவும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    இதில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வ.செல்வகுமார், முன்னாள் எம்எல்ஏ ஜெமினி கே.ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் அ.கோவிந்தராசன், க.சங்கர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, ஒன்றிய நகரச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, எ.அசோக்குமார், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai