Enable Javscript for better performance
கருணாநிதி பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
    திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியின் பல்வேறு இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, அ.அருள்குமரன், சு.விஜி (எ) விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.
    திருவண்ணாமலை ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சி, தாமரை நகர், திருவண்ணாமலை காமராஜர் சிலை, போளூர் சாலை அறிவொளிப் பூங்கா, திருவள்ளுவர் சிலை, திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் பகுதிகளில் வியாழக்கிழமை தெருமுனைப்  பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
    இதில், செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, தலைமை கழகப் பேச்சாளர் பழ.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
    கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், திமுக மாவட்ட அமைப்பாளர்கள் சேஷா.திருவேங்கடம், கு.கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், ஒன்றியச் செயலர்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai