Enable Javscript for better performance
குப்பை உரக் கிடங்குகள் அமைக்க வந்தவாசியில் இடம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    குப்பை உரக் கிடங்குகள் அமைக்க வந்தவாசியில் இடம் ஆய்வு

    By DIN  |   Published on : 14th July 2018 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி நகராட்சி சார்பில், குப்பை உரக்கிடங்குகள் அமைப்பதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 இடங்களில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    வந்தவாசி நகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், மொத்தம் ரூ.1.42 கோடியில் வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும், வந்தவாசி கே.வி.டி. நகரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும் குப்பை உரக்கிடங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டன.
    ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக பணியை தொடங்க முடியவில்லை. இதனால் இந்த இரு இடங்களிலும் உரக்கிடங்கு அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
    இதையடுத்து, குப்பை உரக்கிடங்குகளை அமைக்க சுகநதி ஆற்றை ஒட்டிய பகுதி, கோட்டை அகழியை ஒட்டிய பகுதி, ஐந்து கண் பாலம் அருகில் மயானத்தை ஒட்டிய பகுதி என புதிதாக 3 இடங்களை நகராட்சி நிர்வாகம் தேர்வு செய்தது.
    இந்த 3 இடங்களிலும் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குப்பை உரக்கிடங்குகளை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கிக் கூறினர்.
    வந்தவாசி நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி, திமுக மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலர் கோட்டை பாபு, நகராட்சி கட்டட ஆய்வாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai