Enable Javscript for better performance
சிறு, குறு விவசாயிச் சான்று பெற வேட்டவலத்தில் இன்று சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சிறு, குறு விவசாயிச் சான்று பெற வேட்டவலத்தில் இன்று சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 14th July 2018 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் வட்டார விவசாயிகள் சிறு, குறு விவசாயிச் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
    இந்த முகாமில், வேட்டவலம் உள் வட்டத்தைச் சேர்ந்த வேட்டவலம், அணுக்குமலை, ஜமீன்கூடலூர், வைப்பூர், ஆவூர், ஓலைப்பாடி, பண்ணியூர், ஆங்குணம், ராஜந்தாங்கல், சாணிப்பூண்டி, இலுப்பந்தாங்கல், நெய்வாநத்தம், வயலூர், கல்லாய்சொரத்தூர், அகரம், நீலந்தாங்கல், பொன்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், தெளிப்பு நீர், மழைத்தூவான், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிட்டா, அடங்கல், நிலவரைபடம் ஆகியவற்றை வழங்கி சிறு, குறு விவசாயிச் சான்று பெற்று பயன்பெறலாம் என்று கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ராம்பிரபு கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai