Enable Javscript for better performance
நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை அனைத்துத் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாநிலத் தலைவர் டி.பிச்சாண்டி தலைமை வகித்தார். கற்பகம் கூட்டுறவு அங்காடி பொதுச் செயலர் பி.பாண்டியன் முன்னிலை வகித்தார். தொமுச மாநில பேரவைச் செயலர் க.சவுந்தரராசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
    ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai