Enable Javscript for better performance
பறிமுதல் வாகனங்கள் ஜூலை 17-இல் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட  மது விலக்கு அமல் பிரிவு சார்பில், பறிமுதல் செய்யப்பட்ட 32 வாகனங்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) ஏலம் விடப்படுகின்றன.
    திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு சார்பில் அண்மையில் பலதரப்பட்ட 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் நுழைவுக் கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
    வரும் திங்கள்கிழமை (ஜூலை 16) காலை 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை ரசீது வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் மட்டும் திரும்ப அளிக்கப்படும்.
    ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 28 சதவீத ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து உடனடியாக அந்த இடத்திலேயே செலுத்த வேண்டும். இதற்கான ரசீது உடனடியாக வழங்கப்படும். பதிவு எண், என்ஜின் எண், சேசிஸ் எண் இல்லாத வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது.
    ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீது மட்டுமே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும், விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மது விலக்கு அமலாக்கப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175 - 233920 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி 
    தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai