Enable Javscript for better performance
மணல் திருட்டைத் தடுக்க செய்யாற்றுக்கு செல்லும் வழியில்பள்ளம் தோண்டிய அதிகாரிகள்- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருட்டைத் தடுக்க செய்யாற்றுக்கு செல்லும் வழியில் பள்ளம் தோண்டிய அதிகாரிகள்

    By DIN  |   Published on : 14th July 2018 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த வசூர், காப்பலூர் ஆகிய கிராமப் பகுதிகள் வழியாகச் செல்லும் செய்யாற்றில் இருந்து மணல் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த ஆற்றுக்கு செல்லும் வழிகளில் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டினர்.
    போளூரை அடுத்த வசூர் ஊராட்சி அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து மர்ம நபர்கள் மாட்டு வண்டிகள், லாரிகள், டிராக்டர்களில்  அனுமதியின்றி மணலை அள்ளி வந்து வசூர், காப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி வைத்து, அங்கிருந்து இரவு வேளைகளில் மணலை கடத்தி வந்தனர். இது தொடர்பாக தினமணி நாளிதழில் அண்மையில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
    இந்த நிலையில், போளூர் வட்டாட்சியர் தியாகராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் வசூர், காப்பலூர் ஆகிய பகுதிகளில் செய்யாற்றிலிருந்து மணல் திருடப்படுவதைத் தடுக்கும் 
    விதமாக, அந்த ஆற்றுக்குச் செல்லும் வழிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். இதனால் செய்யாற்றில் இருந்து மணல் திருடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai