Enable Javscript for better performance
மாவட்ட நீதிமன்றத்தில் ஆவின் பாலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்தார்.
    விழாவில், வேலூர் ஆவின் பொது மேலாளர் முரளி பிரசாத், திருவண்ணாமலை துணைப் பொது மேலாளர்கள் கணேசா, நாச்சியப்பன், பால் விற்பனை அலுவலர் பி.சரவணன் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai