Enable Javscript for better performance
விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 14th July 2018 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டி, கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் அந்தக் கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 
    அவர் பூரண நலம் பெற வேண்டி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தேமுதிக சார்பில், மேக்களூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் அமைவாசையையொட்டி, வியாழக்கிழமை இரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
    இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் உத்ஸவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், மாவட்டப் பிரதிநிதி ரங்கன், தேமுதிக ஊராட்சிச் செயலர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தேமுதிக பொருளாளர் எம்.கே.குமார், கிளைச் செயலர்கள் ஜான், கோபால், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai