Enable Javscript for better performance
ஆரணியில் மின் விளக்குகள், சாலை சந்திப்பு கட்டமைப்பு அமைக்கும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் மின் விளக்குகள், சாலை சந்திப்பு கட்டமைப்பு அமைக்கும் பணி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 15th July 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி பகுதியில் சாலை மையப் பகுதி தடுப்புக் கட்டையில் மின் விளக்குகள், சாலை சந்திப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.
    ஆரணி நகரின் நுழைவுப் பகுதிகளான ஆரணி - ஆற்காடு சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகில், ஆரணி - வேலூர் சாலையில் உள்ள சேவூர் நெடுஞ்சாலையை இணைக்கும் இடம், ஆரணி அண்ணா சிலை, ஆரணி - திருவண்ணாமலை சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி, கண்ணமங்கலம் - வேலூர் சாலையில் உள்ள காவல் நிலையம் அருகில் ஆகிய 5 இடங்களில் ரூ.3 கோடியில் சாலை சந்திப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகளையும், ஆரணி இந்திரா காந்தி சிலை அருகிலிருந்து எம்ஜிஆர் சிலை வரை சுமார் ரூ.50 லட்சம் செலவில் சாலை மையப் பகுதி தடுப்புக் கட்டையில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகளையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வ.செல்வகுமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள்அ.கோவிந்தராசன், க.சங்கர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai