Enable Javscript for better performance
ஆரணி அருகே கடத்தல் கும்பலிடமிருந்து சுவாமி சிலை மீட்பு: 9 பேரிடம் போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அருகே கடத்தல் கும்பலிடமிருந்து சுவாமி சிலை மீட்பு: 9 பேரிடம் போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 15th July 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் கடத்தல் கும்பலிடமிருந்து ஒரு சுவாமி சிலையை மீட்ட போலீஸார், அந்தக் கும்பலைச் சேர்ந்த 9 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் அண்மைக்காலமாக தொடர்ந்து சிலைகள் கடத்தப்பட்டு வருவாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், கண்ணமங்கலம் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    இந்த நிலையில், கண்ணமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சனிக்கிழமை சுற்றித் திரிந்த 9 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போலீஸார், அவர்களிடம் இருந்து ஒரு சுவாமி சிலையை மீட்டனர். மேலும், இந்தக் கும்பலுக்கு யார், யாரிடம் தொடர்புள்ளது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    எனினும், சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமான என்பது குறித்த விவரங்களை
    போலீஸார் வெளியிடவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai