Enable Javscript for better performance
கல்லூரியில் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் கே.சுகுணா வரவேற்றார்.
    ஆராய்ச்சி குறித்தும், கலைத் துறையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது குறித்தும் வேலூர் ஊரிசு கல்லூரியின் ஓய்வு பெற்ற வணிகவியல் துறைத் தலைவர் எம்.அன்பழகன் பேசினார்.
    அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது குறித்தும், அவற்றை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்தும் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் தேசிகன் ராஜகோபால் பேசினார்.
    இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் கே.ஜெகதி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai