Enable Javscript for better performance
குத்தனூரில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    குத்தனூரில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

    By DIN  |   Published on : 15th July 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறை அடுத்த குத்தனூரில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    முகாமுக்கு செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் பத்மபிரியா முன்னிலை வகித்தார். நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் என்.ஈஸ்வரி வரவேற்றார்.
    இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு, மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தார். முகாமில், கர்ப்பிணிகள் 62 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை, 324 பேருக்கு ஆய்வக பரிசோதனை, 30 பேருக்கு இ.சி.ஜி, 54 பேருக்கு கர்ப்பவாய் புற்று நோய் பரிசோதனை என 1,132 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், முகாமில் பங்கேற்ற 16 பேர் தீவிரச் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
    முகாமில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் துரைராஜ், நல கல்வியாளர் எல்லப்பன், சுகாதார துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் துரைசாமி, முன்னாள் உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், கார்த்திகேயன், ரமேஷ், நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் வி.ஜி.ராதாகிருஷ்ணன், ராகவன், சுகாதார ஆய்வாளர்கள் கே.சம்பத், மாதவன், சமுதாய செவியர் ஆர்.சி.ஹேலதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai