Enable Javscript for better performance
தொழிலாளி மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே தொழிலாளி மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலையை அடுத்த சே.அகரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அண்ணாதுரை (55). இவர், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    இதையடுத்து, உறவினர்கள் அவரை தேடியபோது, அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் சடலமாகக் கிடந்தாராம். இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai