Enable Javscript for better performance
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சிவசங்கரி மாணிக்கம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுமித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார்.
    பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், நோய்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடியும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    இதில், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர், மூர்த்தி மெட்ரிக் பள்ளியின் உடல் பயிற்சி ஆசிரியர் அன்பரசு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தேவேந்திரன், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai