Enable Javscript for better performance
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது.
    திருவண்ணாமலை விக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி நிர்வாகி சவிதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரேவதி முன்னிலை வகித்தார்.
    விழாவையொட்டி, காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
    கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான நாடகத்தை மாணவ, மாணவிகள் நடத்தினர். விழாவில், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    செய்யாறு: செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடினர்.
    விழாவில் விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி கலந்து கொண்டு, காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேற்கொண்ட பல்வேறு நலத் திட்டகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே விளக்கிக் கூறினார்.
    நிகழ்ச்சியில் விஸ்டம் பள்ளியின் முதன்மை முதல்வர் ஜி.மதியழகன், இணை முதல்வர் வஹிதா, துணை முதல்வர் அன்பழகன், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    வந்தவாசியில்...: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக வந்தவாசி வட்டார வளமைய வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மையத்தில் கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் க.ஜோதிபாபு தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெ.ஏழுமலை, வட்டார வளமைய பொறுப்பாளர் வி.மீனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சையத்அப்துல்கறீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாற்றுத் திறனாளிகள் மைய பயிற்சி ஆசிரியர் எல்.லத்தீப் மற்றும் கேசவன், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai