Enable Javscript for better performance
பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கை- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டை காவல் நிலையம் எதிரே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
    வாலாஜாபேட்டையை அடுத்த செங்காடு அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் சுகுணா (45).
    இவரது கணவர் நம்பிராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
    செங்காட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (35), தனது வீட்டை சேதப்படுத்தி, மிரட்டல் விடுப்பதாகக் கூறி அவர் மீது சுகுணா, ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.
    புகார் அளித்துவிட்டு காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்த சுகுணாவை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சுகுணா நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    போலீஸ் விசாரணையில், சுகுணாவுக்கும், சுரேந்திரனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததும், இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் சுகுணா சுரேந்திரன் மீது புகார் அளிக்க வந்தபோது, சுரேந்திரன் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது.
    இதுகுறித்து ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச் செல்வன் தலைமையில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, சுரேந்திரனைத் தேடி வந்தனர்.
    இந்நிலையில், சுரேந்திரன் வியாழக்கிழமை நள்ளிரவு சென்னைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது அவரை, போலீஸார் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
    இதையடுத்து அவர் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai