Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு அரசு ஆரம்பப் பள்ளியில் காமராஜரின் 116-ஆவது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவையொட்டி, காமராஜரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ச.டேவிட்ராஜன் தலைமை வகித்தார். பள்ளிமேலாண்மைக்குழுத் தலைவர் சசிகலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    பள்ளி உதவித் தலைமை ஆசிரியை லீலாராணி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியர் ஜாகீர்உசேன், மகளிர் சுயஉதவிக் 
    குழுத் தலைவர் நிர்மலா, பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai