Enable Javscript for better performance
ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வட்டாட்சியர் ரேணுகா சனிக்கிழமை வழங்கினார்.
    செங்கத்தை அடுத்த அரட்டவாடி வாம் தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகள் 100 பேர் தங்கி, அரட்டவாடி, பிஞ்சூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
    அவர்களுக்கு வாம் தொண்டு நிறுவனம் சார்பில், ஓராண்டுக்குத் தேவையான நோட்டு புத்தகம், எழுது பொருள்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கம் வட்டாட்சியர் ரேணுகா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், சீருடை, எழுது பொருள்களை வழங்கியதுடன், மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினார்.
    நிகழ்ச்சியில் தம்புநாய்கன்பட்டி அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் நித்யானசாமி, இறையூர் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, அரசுப் பள்ளி உடல் பயிற்சிஆசிரியர் கந்தன், வாம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, ராஜசேகர், இளையராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai