Enable Javscript for better performance
காமராஜர் பிறந்த நாள்: கட்சியினர் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 116-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ், தமாகா, அமமுக உள்பட பல்வேறு கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
    திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, நகர காங்கிரஸ் சார்பில் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார்.
    மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    அமமுக: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவர் குரு.ஏழுமலை தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.தருமலிங்கம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    தமாகா: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமாகா சார்பில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மாநில பொதுச் செயலர் தங்கராஜ், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    இதில், இளைஞரணி மாநில துணைத் தலைவர் சி.கே.ஆர்.கமல், மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.அருள், மாவட்டச் செயலர் ஆர்.சீனுவாசன், நகரத் தலைவர் பி.ஏ.முத்தலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மற்ற கட்சியினர்: இதேபோல, கோகுல மக்கள் கட்சி சார்பில், அதன் மாநில இளைஞரணிச் செயலர் செங்கம் கு.ராஜாராம், தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் மாநில இளைஞரணிச் செயலர் ஆர்.மணிகண்டன், திருவண்ணாமலை மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்டப் பொருளாளர் கே.முருகேசன், மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல்ராஜ், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அதன் மாவட்டத் தலைவர் பி.நடராஜன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    ஆரணி
    காமராஜர் பிறந்த நாளையொட்டி, ஆரணி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். விழாவில் நகரத் தலைவர் ஜெயவேல், மாவட்ட துணைத் தலைவர் யு.அருணகிரி, பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், டாக்டர் வாசுதேவன், முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, கருடா பேரவை பி.கே.ஜி.பாபு, நிர்வாகிகள் மோகனரங்கம், முருகன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தமாகா: ஆரணி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் தினேஷ்,  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். இதில், மாவட்ட துணைச் செயலர் சிவசங்கரன், நகர துணைத் தலைவர் வெங்கடேசன், ஜீவானந்தம், ராஜேந்திரன், பசுபதி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    வடமாதிமங்கலத்தில்...: வடமாதிமங்கலம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் சேத்துப்பட்டு வட்டாரப் பிரதிநிதி ஆர்.கே.பார்த்தசாரதி, காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினர்.
    போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே தமாகா சார்பில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தமாகா கொடி ஏற்றப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    விழாவுக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி.சி.தினகரன் தலைமை வகித்தார். மாநில தொழில் சங்கத் தலைவர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் மணி, வட்டாரத் தலைவர்கள் ரவி, வேலு, பாபுஅய்யர், பாண்டியன், பிரகாஷ், மணிலிங்கம் மற்றும் தமாகாவினர் கலந்து கொண்டனர்.
    செய்யாறு
    செய்யாறு திருவோத்தூர் காமராஜர் படிப்பகத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு தமாகா நகரத் தலைவர் என்ஜினீயர் கே.ஜி.ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பார்வையாளர் பாலி கோ.அரி கட்சிக்கொடி ஏற்றினார்.
    செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்டத் தலைவர் கே.ஆர். தாமோதரன் மேற்பார்வையிலான தமாகாவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    அனக்காவூரில்...: அனக்காவூர் வட்டாரம், ஆக்கூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காமராஜர் உருவப் படத்துக்கு 
    தமாகா வடக்கு வட்டாரத் தலைவர் கே.இராசவேல் மாலை அணிவித்தார். பின்னர், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுப் பொருள்களுடன் இனிப்பு வழங்கினார். 
    நிகழ்ச்சியில் கிராம கமிட்டி தலைவர் சி.கோவிந்தன், மகளிரணித் தலைவி டி.உஷா, மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.முனியாண்டி, ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai