Enable Javscript for better performance
கோயில் விழா நெரிசலில் சிக்கி 4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    போளூரை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவில் நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர்.
    போளூரை அடுத்த திருசூர் ஊராட்சியைச் சேர்ந்த நம்மியந்தல் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளமும், மாலையில் கோயில் முன் தீமிதி விழாவும் நடைபெற்றன. தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் அக்னி குண்டத்தில் இறங்கியதால் நெரிசலில் சிக்கி போளூரை அடுத்த  அத்திமூர் கிராமத்தைச் சேர்ந்த மார்சியகவுண்டர் மகன் சுப்பிரமணி (65), பலராமன் மகன் ஐயாயிரம் (35), போளூரைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மூர்த்தி (65), நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
    பின்னர், இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 2 பேருக்கு பலத்த காயமும், 2 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai